Beginner
Watch these insightful videos and Take your 1st step into Financial Market.
Key Learnings:Basics of Stock MarketFinancial MarketSecrets of Derivative
Chapter 4
மியூச்சுவல் ஃபண்டு மேற்கோள்களை எவ்வாறு படிப்பது / விளக்குவது
இந்த வீடியோவில், Mutual funds மேற்கோளை எவ்வாறு படிப்பது என்பதை பற்றி விவாதிப்போம்.
சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு செயல்படுகிறது என்ற விவரங்களை நாம் அறிய விரும்பும் போதெல்லாம், அதன் பங்கு மே

இந்த வீடியோவில், Mutual funds மேற்கோளை எவ்வாறு படிப்பது என்பதை பற்றி விவாதிப்போம்.
சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு செயல்படுகிறது என்ற விவரங்களை நாம் அறிய விரும்பும் போதெல்லாம், அதன் பங்கு மேற்கோளை தேடுகிறோம். இதேபோல், மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனைப் புரிந்து கொள்ள விரும்பும்போது, மியூச்சுவல் ஃபண்ட் மேற்கோளின் உதவியை நாம் நாடலாம்.
Mutual Fund மேற்கோள், அட்டவணை அல்லது விளைநிலைப்புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது, இது பரஸ்பர நிதியத்தின் அனைத்து விவரங்களையும் கொண்ட ஒரு ஆன்லைன் ஆதாரமாகும், இது நாமெடுக்கும் முதலீட்டு முடிவுகளை பாதிக்கும்.
Mutual funds மேற்கோளின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிப்போம்.
Mutual Funds மேற்கோளின் கண்ணோட்டத்தைப் பற்றி முதலில் நாம் பார்ப்போம்.
நாம் முதலில் பார்க்கக்கூடியது திட்டத்தின் வகை. திறந்த வகை செயல்பாட்டின் அடிப்படையிலா (Open ended) அல்லது மூடிய வகை (Close ended) செயல்பாட்டின் அடிப்படையிலா என்பதை அறிய வேண்டும்.
இதன் அவசியம் என்னவென்றால் ஒவ்வொரு வகையும் வெவ்வேறு இடர்களையம் நோக்கங்களையும் கொண்டுள்ளது.
வெளியேறும் சுமை (Exit Load) மற்றும் திட்டத்தின் செலவு விகிதம் (Expense ratio) போன்ற திட்டத்தின் பிற விவரங்களையும் நாம் காணலாம்.
இந்த விகிதம், நிகர இலாபங்களை கணக்கிடும் நேரத்தில் NAV இலிருந்து கழிக்கப்படுவதால், இது, கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணியாகும்.
அடுத்து, நிகர சொத்து மதிப்பு அல்லது NAV உள்ளது. NAV என்பது நிதியின் ஒரு யூனிட்டுக்கான சந்தை மதிப்பு.
NAV உடன், அது புதுப்பிக்கப்பட்ட தேதி மற்றும் அதன் மதிப்பின் அடிப்படையில் உள்ள சதவீத மாற்றத்தையும் காணலாம்.
ஒரு நிதியின் NAV அதன் இருப்பு காலப்பகுதியில் நிதி எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைக் கூறுகிறது, ஆனால் இது செயல் திறனின் நேரடி அறிகுறி அல்ல
மதிப்பின் அடிப்படையில் உள்ள திட்டத்தின் செயல்திறனை அளவிட, திட்டத்தின் வருமானமும் அதன் விவரங்களையும் கவனிக்க வேண்டும்.
திட்ட விவரங்களில் மியூச்சுவல் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவை நீங்கள் பார்க்க முடியும் என்றாலும், திட்ட வருமானம் ஒரு மாதம், ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் போன்ற பல்வேறு காலங்களில் நிதியத்தால் வழங்கப்பட்ட சராசரி வருமானத்தைக் காட்டுகிறது.
அடுத்து, ஈவுத்தொகை வரலாறு (Dividend history) பகுதிக்கு செல்லலாம்.
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலிருந்து சிறிது வருமானம் ஈட்ட விரும்பினால், இந்த காரணியை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.
அடுத்ததாக, மேற்கோளின் போர்ட்ஃபோலியோ பிரிவு
இங்கே, நீங்கள் நிதியின் சொத்து ஒதுக்கீட்டைக் காணலாம். நிதி முதலீடு செய்யும் துறைகளையும், நிதி அதிகம் முதலீடு செய்த நிறுவனங்களின் விவரங்களையும் மதிப்பீடு செய்யலாம்.
அடுத்து, பியர்ஸ் பகுதியைப் பார்ப்போம்.
இங்கே, நமக்கு பிடித்த Mutual Fund களுடன் ஒப்பீடு செய்து போர்ட்ஃபோலியோவுக்கு தகவலறிந்த முடிவை நாம் எடுத்து கொள்ளலாம்.
அவற்றின் கண்ணோட்டம் மற்றும் அவற்றின் மேல் இருப்பு போன்ற வெவ்வேறு காரணிகளின்படி நீங்கள் ஒப்பீடுகளை செய்யலாம்.
இந்தத் திரையில், நீங்கள் விரும்பும் எந்த நிதிகளையும் சேர்க்கலாம். மற்றும் நிதியை ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்கு விருப்பமான அளவுகோல்களைத் தேர்வு செய்யலாம்.
ஆக, இதுவரை நாம் பார்த்தது, மியூச்சுவல் ஃபண்ட் மேற்கோள் என்பது மியூச்சுவல் ஃபண்ட் செயல்திறனைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் ஒரு தீர்வாகும், மேலும், இது தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.
-
MF இல் முதலீடு செய்வது எப்படி
03:31
Chapter 1
MF இல் முதலீடு செய்வது எப்படி
-
முதலீட்டிற்கான மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகள்
04:46
Chapter 2
முதலீட்டிற்கான மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகள்
-
மியூச்சுவல் ஃபண்டு முதலீடு Vs நிலையான வைப்பு நிதி (FD)
04:08
Chapter 3
மியூச்சுவல் ஃபண்டு முதலீடு Vs நிலையான வைப்பு நிதி (FD)
-
மியூச்சுவல் ஃபண்டு மேற்கோள்களை எவ்வாறு படிப்பது / விளக்குவது
03:53
Chapter 4
மியூச்சுவல் ஃபண்டு மேற்கோள்களை எவ்வாறு படிப்பது / விளக்குவது
-
மியூச்சுவல் ஃபண்ட் / இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இடிஎஃப் நிதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
04:04
Chapter 5
மியூச்சுவல் ஃபண்ட் / இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இடிஎஃப் நிதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
-
மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் என்ன
03:50
Chapter 6
மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் என்ன?
-
SIP என்றால் என்ன, எது சிறந்தது, SIP ஆ அல்லது மொத்த முதலீடா?
04:20
Chapter 7
SIP என்றால் என்ன, எது சிறந்தது, SIP ஆ அல்லது மொத்த முதலீடா
-
பொருட்கள் என்றால் என்ன?
04:54
Chapter 8
பொருட்கள் என்றால் என்ன
-
அந்நிய செலாவணி என்றால் என்ன?
03:39
Chapter 9
அந்நிய செலாவணி என்றால் என்ன
-
நாணயம் மற்றும் பொருட்கள் வர்த்தகத்திற்கான அடிப்படை வழிகாட்டி
03:55
Chapter 10
நாணயம் மற்றும் பொருட்கள் வர்த்தகத்திற்கான அடிப்படை வழிகாட்டி
-
பொருட்கள் வர்த்தகம் என்றால் என்ன, அது இந்தியாவில் வெவ்வேறு சந்தைகளில் எவ்வாறு இயங்குகிறது
03:46
Chapter 11
பொருட்கள் வர்த்தகம் என்றால் என்ன, அது இந்தியாவில் வெவ்வேறு சந்தைகளில் எவ்வாறு இயங்குகிறது
-
காப்பீடு- நீங்கள் ஏன் ஒரு கால காப்பீட்டிற்கு செல்ல வேண்டும்
03:39
Chapter 12
காப்பீடு- நீங்கள் ஏன் ஒரு கால காப்பீட்டிற்கு செல்ல வேண்டும்